எலுமிச்சம்பழம் எங்க நம்பிக்கை.. உங்களுக்கு பிடிக்காட்டி எங்களுக்கு கவலையே கிடையாது.. நிர்மலா

nirmala sitharaman says about lemons to protect rafale part of our culture புதுடெல்லி: "ஆமாங்க.. இதில என்ன தப்பு இருக்கு? உங்களுக்கு வேணும்ன்னா பிடிக்காமல் இருக்கலாம்.. மூடநம்பிக்கைன்னு கூட சொல்லலாம். எங்களுக்கு அதை பத்தியெல்லாம் கவலை கிடையாது. ராஜ்நாத் சிங் அன்னைக்கு என்னென்ன பண்ணாரோ, அதெல்லாம் சரிதான்" என்று எலுமிச்சம் பழ விவகாரம் குறித்து நிர்மலா சீதாராமன் காட்டமான கருத்தை தெரிவித்துள்ளார். பிரான்ஸ் நாட்டுக்கு சென்றிருந்த பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அங்கு முதல் ரபேல் போர்விமானத்தை பெற்றுக் கொண்டார்.

வாங்கி கொண்டவர் சும்மா இல்லாமல், அங்கேயே பகிரங்கமா, அந்த ரபேல் போர் விமானத்திற்கு மேலே ஓம் என்று எழுதினார். தேங்காய் பழம் வைத்து பூஜை செய்தார். வெறும் பூஜையோடு நிறுத்தாமல் ஒரு படி மேலபோய், விமானத்தின் டயர்களுக்கு கீழே எலுமிச்சம் பழங்களை வைத்து நசுக்கி விமானத்தை கிளப்பினார். இது சர்ச்சையையும் கேலியையும் கிளப்பி வருகிறது. இதற்கு ராஜ்நாத் சிங்கே ஒரு விளக்கமும் தந்தார். "வாயில் வந்ததையெல்லாம் பேச உரிமை உண்டு. அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. எனக்கு எது சரின்னு பட்டதோ அதை செய்கிறேன். இது எங்க நம்பிக்கை.. மனிதர்களையும் மீறிய சூப்பர் சக்தி இருக்கிறது.. சின்ன குழந்தையில் இருந்தே இந்த நம்பிக்கை எனக்கு இருக்கு" என்றார். இந்த எலுமிச்ச பழ விவகாரம் குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு ராஜ்நாத் சிங்கின் கருத்துதான் தன் கருத்தும் என்று சொல்லிவிட்டார். "அதில என்ன தப்பு இருக்கு? உங்களுக்கு வேணும்ன்னா பிடிக்காமல் இருக்கலாம்.. நீங்க வேணும்ன்னா அங்கீகரிக்காமல் இருக்கலாம்.. மூடநம்பிக்கைன்னு கூட சொல்லலாம். ஆனா எங்களுக்கு அதை பத்தியெல்லாம் கவலை கிடையாது. ராஜ்நாத் சிங் அங்கு என்ன செய்தாரோ, அதெல்லாம் சரிதான். இதெல்லாம் நம் கலாசாரத்தை சேர்ந்த விஷயம். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு வகையில் இப்படி செய்வார்கள். ஏன், இதுக்கு முன்னாடி ராணுவ அமைச்சராக இருந்தாரே.. அவரும் அவர் மனைவியும், கடற்படை கப்பலை தொடங்கி வைத்தபோது அவர்களின் மத நம்பிக்கைப்படிதானே நடந்து கொண்டனர். இப்ப இந்த எலுமிச்சம் பழ பத்தி பேசுபவர்கள் எல்லாம் அப்போ எங்கே போனாங்க?" என்று காட்டமாக கூறியுள்ளார்.

Comments

Nanjil Siva said…
எலுமிச்சம் பழமா? ... எலிமிச்சம் பழமா? ... எலிமிச்சைதான் கரெக்ட் ... ஒரு கூடைல நிறைய பழங்கள் இருந்திச்சாம் ... அங்க வந்த சில எலிங்க அந்த கூடையில இருந்த பழங்களை எல்லாம் சாப்பிட்டதாம். ஆனா ஒரே ஒரு பழத்த மட்டும் சாப்பிடாம மிச்சம் வச்சுட்டு போயிட்டுதாம் ... ஏன்னா அது புளிப்பு...அன்றிலிருந்து இன்றுவரை அந்த பழத்த எலி மிச்சம் வைத்ததால ''எலி மிச்சம் பழம்'' என்று அன்போடு அழைத்து வருகிறோம்... >> சயின்டிபிக் ஜட்ஜ்மெண்ட்