
இவர் தனது 17 ஆண்டுக்கால சினிமா வாழ்வில், தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 450 படங்களில் நடித்துவிட்டார். ஆனால் தனிப்பட்ட பிரச்சினை காரணமாக இவர் 1996ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவர் உலகை விட்டு மறைந்த பின்பு சினிமாவில் அவரது இடத்தை நிரப்ப இன்று வரை யாருமே வரவில்லை. அவரது குரல், நடனம், பார்வை எல்லாவற்றிற்கும் இன்றைய இளைஞர்கள் கூட அடிமை. அவரது இடத்தை பிடிக்க மும்தாஜ், முமைத்கான் எனப் பலர் முயற்சி செய்தனர்.
இந்நிலையில் நடிகை சில்க் ஸ்மிதாவின் சாயலில் பெண் ஒருவர் டிக்டாக்கில் வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார். அவர் சில்க் ஸ்மிதாவின் சாயலில் இருப்பதாலேயே தற்போது மிகப்பெரிய அளவில் வைரலாகி விட்டார்.
அவர் தனது டிக்டாக் பக்கத்தில் அப்லோடு செய்யும் பால் கள் எல்லாம் சில்க் ஸ்மிதாவின் பாடல்கள் தான். அவரின் இந்த வீடியோக்களை சில்க் ஸ்மிதாவின் ரசிகர்கள் வேகமாகப் பரப்பி வருகின்றனர். யூடியூப் சேனல்கள் எல்லாம் இந்த பெண்ணை இன்டர்வியூ எடுக்க வலைவீசி வருகிறது. ஆனால் இந்த பெண் குறித்த தகவல்கள் தான் யாருக்கும் கிடைக்கவில்லை.
Comments