
தீவிரவாதிகளுக்கு உதவி செய்வதை தடுக்க, இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. கடந்த மாதம், அரசு, லேண்ட்லைன் இணைப்புகளை மறுபடியும் இயங்க அனுமதித்தது. இருப்பினும், அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல் சேவைகளுக்கு அதுவும் வீடுகளுக்கு மட்டும் இந்த சலுகை வழங்கப்பட்டது. அமெரிக்கா உட்பட பல நாடுகள் இந்த கட்டுப்பாடுகள் குறித்து கவலை தெரிவித்தன. கடந்த மாதம் பெல்ஜியத்தில் நிருபர்கள் கேள்விக்கு பதிலளித்த வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், "காஷ்மீர் முழுவதையும் பாதிக்காமல் போராட்டம் நடத்துவோருக்கு இடையேயான தகவல்தொடர்புகளை மட்டும் நிறுத்த முடியாது. பயங்கரவாதிகளுக்கும் அவர்களின் எஜமானர்களுக்கும் இடையிலான தொடர்புகளை நான் எவ்வாறு துண்டிக்க முடியும்?" என்று கேள்வி எழுப்பியிருந்தார். ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்த்தை இந்தியா ரத்து செய்தது முதல், அங்கு தொலைதொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Comments