
அதற்காகத்தான் விஜயகாந்த்தை விட்டுக்கொடுக்காமல், அமைச்சர்கள் வீடு தேடிச் சென்று சென்று ஆதரவு தரும்படி கேட்டு கொண்டனர். அதன்படியே பிரேமலதாவும், கடைசி நாளன்று விஜயகாந்தும் வந்து பிரச்சாரம் செய்துவிட்டு போனார்கள். ஒருவருக்கொருவர் ஆகாது என்றாலும், கூட்டணி தர்மத்தை இரு கட்சி தலைவர்களுமே காப்பாற்றி அதன்படி நடந்து கொண்டனர். ஆனால், தொண்டர்களுக்கு இது புரியவில்லை போலும்!
இன்று பலமான பாதுகாப்புடன் இடைத்தேர்தல் நடந்த நிலையில், விக்கிரவாண்டியில் பாமக, தேமுதிக தரப்பினர் பலமாக மோதிக் கொண்டனர். கல்யாணம் பூண்டி என்ற கிராமத்தில் தேமுதிக, பாமக நிர்வாகிகள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டுள்ளனர்.
விஷயம் இதுதான்.. தேமுதிகவின் சேகர் மற்றும் பாமகவின் மணிகண்டன் இருவரிடையே பணம் பங்கிட்டுக்கொள்வதில் இந்த தகராறு ஏற்பட்டிருக்கிறது. இரு தரப்பினரும் கைகலப்பு வரை சென்றுவிட்டனர்.. இதனால் தகவல் போலீசுக்கு தெரிவிக்கப்பட்டு அவர்களும் விரைந்து வந்தனர். இரு தரப்பையும் போலீஸார் தலையிட்டு விலக்கி விட்டனர்.
நடக்கும் தேர்தல் அதிமுக - திமுக இடையேதான் என்று சொல்லப்பட்டு வரும் நிலையில், அதிமுக கூட்டணியில் உள்ள இரு கட்சியினருமே மோதிக் கொண்டுள்ளது பெரிய சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. அத்துடன் அந்த பகுதியில் பரபரப்பும் நிலவுகிறது.
Comments