Bigil Trailer : செஞ்சுட்டா போச்சு.. வெறித்தனத்துக்கும் மேல.. தளபதி மாஸ்.. அடி தூள் பிகில் டிரெய்லர்!

சென்னை: பிகில் பட டிரெய்லரை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சர்கார் படத்திற்கு பிறகு விஜய் படத்துள்ள படம் பிகிம். விஜய் - அட்லீ வெற்றிக்கூட்டணி, நயன்தாரா ஜோடி, ஏ.ஆர்.ரஹ்மான் இசை என படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பிகில் படம் தீபாவளி பண்டிகைக்கு வெளியாக உள்ளது. இதையொட்டி படத்தின் டிரெய்லர் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்பட்டது. விஜய் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் டிரெய்லரை அமைத்துள்ளார் இயக்குனர் அடலீ.

"இதை நான் எப்படி சொல்லுவேன். என் வாழ் நாளில் நான் பார்த்த மிகச் சிறந்த டிரெய்லர் இது தான். தளபதி சும்மா தீயா இருக்காப்ள. பிகில் படக்குழுவுக்கு எனது வாழ்த்துகள்", என பிக் பாஸ் தமிழ் 3 டைட்டில் வின்னர் முகென் ராவ் தெரிவித்துள்ளார். முகென் ஒரு தீவிர விஜய் ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.

"வாவ் வாவ், தளபதி மாஸ். சூப்பரான விஷுவல்ஸ். ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசை புல்லரிக்க வைக்குது. நிச்சயம் பிகில் படம் விஜய்யின் மாஸ் படமாக இருக்கும். எமோஷன்ஸ், கதை என எல்லாமே ஆசம்", என இவர் தெரிவித்துள்ளார்.

"எங்க ஆட்டம் வெறித்தனம். அந்தர் மாஸ் டிரெய்லர் நா.. எங்க தியேட்டரில் மிகப் பெரிய கொண்டாட்டம் வேண்டுமா? செஞ்சுட்டா போச்சு", என திருநெல்வேலி ராம் சினிமாஸ் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். ஆக, பட ரிலீஸ் அன்று நெல்லையில் விஜய் ரசிகர்களுக்கு செம கொண்டாட்டம் காத்திருக்குது.

"வெறித்தனம் என்பது சும்மா தான். இது அதுக்கும் மேல. லல் யூ தளபதி" என இவர் கூறியுள்ளார். இதேபோல் ஏகப்பட்ட விஜய் ரசிகர்கள் பிகில் டிரெய்லர் குறித்து பதிவிட்டு வருகின்றனர். இதனால் #BigilTrailer எனும் ஹேஷ்டேக் டிரெண்டிங்காகியுள்ளது.

Comments