
இந்நிலையில் எரிகிற தீயில் மேலும் எண்ணெயை ஊற்றுவது போல, ஜியோவிற்கு போட்டியாக வோடபோன் நிறுவனம் தனது ரூ.30 பீரிபெய்ட் திட்டத்தில் குரல் அழைப்பு உள்ளிட்ட சலுகையுடன் 28நாட்கள் வேலிடிட்டி அறிவித்துள்ளது.
டெலிகாம் டாக் வலைதளம் அறிவிப்பின்படி வோடாபோன் வாடிக்கையாளர்கள் ரூ.30ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 28நாட்கள் வரை டால்க் டைம் பெறமுடியும் என அறிவித்துள்ளது. இருந்தபோதிலும் மும்பை, கேரளா மற்றும்
கர்நாடக வட்டங்களில் மட்டுமே இந்த திட்டம் செல்லுபடியாகும் என அறிவிப்பு வெளிவந்துள்ளது.
மேலும் வோடாபோன் நிறுவனம் இதற்முன்பு அறிவித்த ரூ.45-திட்டம் ஆனது 100எம்பி 4ஜி/3ஜி/2ஜிபி டேட்டா வசதியுடன் 28நாட்கள் வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டம் வினாடிக்கு ஒரு பைசாவில் குரல் அழைப்பை வழங்குகிறது.
அன்மையில் ஜியோ நிறுவனம் ரூ.19 மற்றும் ரூ.52 திட்டங்களைத் தான் நீக்கியுள்ளது. குறிப்பாக ரூ.19சாசெட் பேக் என்று கூறப்படும் திட்டம் ஆனது ஒரே ஒரு நாளைக்கு செல்லுபடியாகும் ஒரு ப்ரீபெய்ட் திட்டமாகும். பின்பு ரூ.52 திட்டமானது மொத்தம் ஏழு நாட்களுக்கு செல்லுபடியை கொண்டது ஆகும்.
ஜியோ இப்போது ரூ.19 மற்றும் ரூ.52 திட்டங்களை நீக்கிவிட்டதால், பயனர்களுக்கான காம்போ திட்டங்கள் ஆனது ரூ.98-ல் தொடங்குகிறது. இந்த 98ரூபாய் திட்டமானது 28நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டமாகும்.
இப்போது நீக்கப்பட்ட ரூ.19-திட்டமானது வரம்பற்ற குரல் அழைப்புகள், 150எம்பி அளிவிலான 4ஜி டேட்டா மற்றும் 20எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளை ஒரு நாள் என்கிற செல்லுபடியாகும் நன்மைகளில் வழங்கப்பட்டது.
அதேபோல் ரூ.52-திட்டமானது 1.05ஜிபி அளவிலான டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்புகள், 70எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளை ஏழு நாட்கள் செல்லுபடியாகும் காலத்தி;ன் கீழ் வழங்கியது. குறிப்பாக இந்த 52ரூபாய் திட்டமானது JioTV, JioCinema, JioSaavn போன்ற ஆப்ஸ்களுக்கான அணுகலையும் வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments