
அந்த இடத்தில் நாற்காலிகள் போடப்பட்டிருந்தது. அதிபருக்கு ஒரு உதவியாளர், பிரதமருக்கு ஒரு உதவியாளர்.. என இரண்டு பக்கமும் உட்கார்ந்து கொண்டனர். மொத்தமே 4 பேர்தான்.. இதில் இரு தலைவர்களும் சிறிது நேரம் பேசியதுதான் ஹைலைட்டாக இருந்தது. ஆளுக்கு ஒரு இளநீரை கையில் பிடித்து கொண்டுள்ளனர். அதில் ஸ்ட்டிரா போட்டு குடித்தபடியே பேசி முடித்தார்கள். இவர்கள் பேசியதை பார்த்தால், நம்ம கிராமப்புறங்களில் ஊர்ப் பெரியவர்கள் கூடி பிரச்சினைகளை பேசித் தீர்ப்பார்கள் இல்லையா... அது மாதிரி இருந்தது.
இதில் இருந்து ஒன்று தெளிவாகிறது.. எந்தப் பிரச்சினையையும் பேசித் தீர்க்கலாம். பேசினால் தீராத பிரச்சினை இல்லை. அதை இப்படி ரிலாக்ஸ்டாக, இயல்பான முறையில் பேசும்போது இன்னும் மனதார பேசி சுமூகமாக தீர்வு காண முடியும் என்பதைதான் இவர்கள் நமக்கு உணர்த்தி உள்ளனர்.. உலகுக்கு மறுபடியும் புரிய வைத்தும் உள்ளனர். டிப்பிக்கல் தமிழ்க் கலாச்சாரமும் கூட இது என்பது நமக்கு எக்ஸ்க்டரா சந்தோஷம்!
Comments