
சொத்துக்காக கொலை என்றாலும், பெண்களை கண்டாலும் ஜோலிக்கு பிடிக்காதாம். அதனால் கொலை செய்த 6 பேரில் 3 பேர் மாமியார் உட்பட பெண்களாக இருந்திருக்கிறார்கள். இவரிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள். ஒவ்வொரு நாளும் ஜோலியிடம் விசாரணை நடத்தும்போதும், வெளியாகும் ஒவ்வொரு தகவல்களும் நமக்கு வயிற்றில் புளியை கரைப்பதுபோல உள்ளது. கணவன் ராய் தாமசுக்கு சாப்பாட்டில் விஷம் வைத்து கொன்றதை இந்தவிசாரணையில் ஜோலியே ஒத்துக் கொண்டார். அதேபோல, 2வது கணவன் ஷாஜியின் மனைவி லிசியைக் கொலை செய்ய மாத்திரையில் விஷம் கலந்துகொடுத்துள்ளார். இந்த கொலைக்கு அந்த ஷாஜியே உதவினாராம். ஆனால் பாவம்.. ஷாஜியையே போட்டு தள்ளிவிட்டு 3-வது கல்யாணத்துக்கு ரெடி ஆகி உள்ளார் ஜோலி. அந்த புது ஆள் பெயர் ஜான்சன். பிஎஸ்என்எல் அதிகாரியாக இருக்கிறாராம். ஆனால் அதுக்கு ஜான்சன் மனைவி ஒத்துக்கணுமே? அதனால அவரையும் போட்டுத்தள்ள முடிவு செய்துள்ளார் ஜோலி. அதாவது ஜோலியின் 2-வது கணவனையும், ஜான்சனின் மனைவியையும் போட்டுத்தள்ள பிளான் நடந்துள்ளது. இதற்கு அந்த ஜான்சனும் உடந்தை. இதையெல்லாம் கேட்ட போலீசார் இன்னமும் ஜோலியிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Comments