
ஆனால், இந்த வெற்றியை எதிர்த்து, அப்பாவு, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். வாக்கு எண்ணிக்கையின்போது, தபால் மூலம் வந்த வாக்குகளில் 300 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன. அதில் 203 வாக்குகளுக்கு தலைமை ஆசிரியர்கள் சான்றளித்திருந்ததால், அதையே காரணமாக சொல்லி, அவை நிராகரிக்கப்பட்டன. தலைமை ஆசிரியர் தபால் வாக்குகளுக்குச் சான்றளிக்கலாம் என விதிகள் உள்ளன. எனவே அந்த வாக்குகளையும் கணக்கில்கொள்ள வேண்டும் என்று அப்பாவு தரப்பில் வாதிடப்பட்டது.
இந்த நிலையில்தான், 203 தபால் ஓட்டுக்களை எண்ண வேண்டும் என்று ஹைகோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது. மேலும் 19, 20, 21 என கடைசி மூன்று சுற்று வாக்கு எண்ணிக்கையின்போது, தன்னை வெளியே அனுப்பிவிட்டு ஓட்டு எண்ணிக்கை நடத்தப்பட்டதாக அப்பாவு தெரிவித்தார். எனவே, இந்த மூன்று சுற்றுகளின் வாக்கு எந்திரங்களை வரும் 4ம் தேதிக்குள் பதிவாளரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம், உத்தரவு பிறப்பித்தது.
முன்னதாக, வாக்கு எண்ணிக்கையின்போது, தேர்தல் அலுவலரிடம், அப்பாவு வாக்குவாதம் செய்தார். சரியாக தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டால், 151 வாக்குகளில் நான் வெற்றி பெறுவேன், என்று தெரிவித்திருந்தார். எனவே ஒருவேளை தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டால், இந்த அளவுக்கான, வாக்குகள் வித்தியாசத்தில் அப்பாவு வெற்றி பெறும் வாய்ப்புள்ளதாக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அதேநேரம், மறு வாக்கு எண்ணிக்கை நடைபெறக் கூடாது என்று, இன்பதுரை சார்பில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வரும் வியாழக்கிழமைக்குள் பதில் தாக்கல் செய்ய அப்பாவுவிற்கு, சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
Comments