***Exclusive வருடக்கணக்கில் ரசிகர்களுக்கு அரசியல் "அல்வா" கொடுக்கும் ரஜினி - கோமாளி பட வீடியோ (இணைக்கப்பட்டுள்ளது)

ரஜினி என்றால் தனி மாஸ் தான்.  தனக்கென ஒரு ரசிகர் படையையே சேர்த்து வைத்திருக்கும் ரஜினி, தனது பாட்சா படத்தில் இருந்து அப்போதைய முதல்வர் ஜெ.வுடன் அரசியல் ரீதியான மோதலில் ஈடுபட்டார்.

தன்னை காக்க, தனது அடுத்தடுத்த படங்களின் வெற்றிக்காக தொடர்ந்து தான் அரசியலுக்கு வருவது உறுதி, உறுதி என தன் ரசிகர்களை உசுபேற்றி வருவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

கடந்த வருடம் தான் தனிக்கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வருவது உறுதி என சொல்லி ஏறக்குறைய விரக்தியின் இறுதியில், வாழ்க்கையில் கடைசி கட்டத்தில் இருக்கும் தன் ரசிகர்களை மீண்டும் உசுபேற்றினார். இருந்தும் இன்று வரை அதற்கான அறிகுறியே இல்லாத நிலையில் ரசிகர்களை தொடர்ந்து தன சுய லாபத்திற்காக ஏமாற்றி வரும் ரஜினியை ஜெயம் ரவி நடித்து வெளிவர இருக்கும் கோமாளி படத்தில் நேரடியாக சாடி இருக்கிறார் படத்தின் இயக்குனர்.

இந்த வீடியோவில் அவர் 100% உண்மையை தான் கூறியிருக்கிறார் என்றாலும் தன் நண்பரான ரஜினிக்கு கமல் ஆதரவாக குரல் கொடுத்தி இருக்கிறார், பிக் பாஸ் இல்லத்தில் இருந்து. கமலை பொறுத்தவரை அரசியல் என்பது தன் எதிர்கால பாதுகாப்பு என்ற நிலையில் தான் இருக்கிறாரே தவிர மக்களின் நலனில் அல்ல. பிக் பாஸ் எனும் நிகழ்ச்சிக்காக அரசியல் வாழ்வில் தற்காலிக துறவரம் பூண்டு இருக்கும் கமல், தன் வியாபார நோக்கத்திற்காக ரசிகர்களை அரசியல் ஆசையால் ஏமாற்றி வரும் ரஜினிக்கு ஆதரவாக குரல் தருவதில் ஆச்சரியம் இல்லை என்றே மக்கள் வெளிப்படையாக கூறுகிறார்கள்.

சின்னப்பிள்ளைகளுக்கு மிட்டாய் கொடுத்து ஏமாற்றுவது போல இன்னும் எத்தனை நாள் தான் ரஜினி தன் ரசிகர்களை எமாற்றுவாரோ...?

Comments