இனி காஷ்மீரில் வெற்றிபெறாமலே ஆட்சியை கட்டுப்படுத்தலாம்.. மத்திய அரசுக்கு கிடைத்த புது பவர்!

இனி டெல்லி: ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கில் இனி தேர்தலில் நின்று வெற்றிபெறாமலே மத்திய அரசு அங்கு ஆட்சியை கட்டுப்படுத்த முடியும். ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு உரிமைகளை வழங்கக் கூடிய அரசியல் சாசனத்தின் 370 பிரிவை நீக்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுக்க இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பாஜக அரசு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை, ஜம்மு காஷ்மீர், லடாக் என்று இரண்டாக பிரிப்பதாக அறிவித்துள்ளது. இதில் ஜம்மு காஷ்மீர் சட்டசபை உள்ள யூனியன் பிரதேசமாகவும், லடாக் சட்டசபை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் செயல்படும்.

என்ன கவனம் இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், காஷ்மீரில் இதுவரை பாஜக தனித்து வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது கிடையாது. அங்கு பீப்பிள் கான்பிரன்ஸ் கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி, தேசிய கான்பிரன்ஸ் கட்சி உள்ளிட்ட கட்சிகள் வலுவான கட்சிகளாக இருக்கிறது.

என்ன காஷ்மீர் ஆனால் காஷ்மீரை லடாக், மற்றும் ஜம்மு காஷ்மீர் என்று பிரித்ததன் மூலம், இந்த மாநில கட்சிகளின் வாக்கு வங்கி மொத்தமாக குறைந்துள்ளது. இதில் கவனிக்க வேண்டியும் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் வாக்கு வங்கியும் இங்கு மொத்தமாக அடி வாங்கி உள்ளது.

ஆனால் ஏன் ஆனால் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகள் இங்கு பெரிய அளவில் வாக்கு வங்கி குறைவதால் கவலை அடைய தேவையில்லை. ஏனென்றால் மத்தியில் ஆட்சி அமைக்கும் கட்சி ஜம்மு காஷ்மீரிலும், லடாக்கிலும் தோல்வி அடைந்தால் கூட எந்த பிரச்சனையும் நிகழாது.

இனி ஏனென்றால் தற்போது ஜம்மு காஷ்மீர், லடாக் இரண்டு பகுதிகளும் யூனியன் பிரதேசங்களாக மாறியுள்ளது. அதிலும் லடாக் சட்டசபை இல்லாத யூனியன் பிரதேசம். இதனால் இரண்டிலும் மத்திய அரசு நியமிக்கும் துணை நிலை ஆளுநர்கள்தான் அதிக பலத்துடன் இருப்பார்கள்.

ஆளுநர் துணை நிலை ஆளுநருக்குத்தான் இங்கு கூடுதல் அதிகாரம் இருக்கும். அதேசமயம் எல்லை பகுதி என்பதால் ஏற்கனவே பாதி இடங்கள் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும். இதனால் மத்திய அரசு இங்கு தேர்தலில் தோல்வி அடைந்தால் கூட, எளிதாக ஆட்சியை கட்டுப்படுத்த முடியும்.

பாஜக ஆகவே இனி வரும் காலங்களில் மெகபூபா , உமர் அப்துல்லா என்று இங்கு யார் ஆட்சி அமைத்தாலும், உண்மையான அதிகாரம் என்னவோ மத்திய அரசு கையில்தான் இருக்கும். அதன்படி காஷ்மீரில் இன்னும் சில நாட்களில் தேர்தல் நடந்தால் கூட, அங்கு அதிகாரம் என்னவோ, பாஜக நியமிக்கும் துணை நிலை ஆளுநர் கையில்தான் இருக்கும்.

Comments