ஜம்மு- காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து.. பாஜக கூட்டணி கட்சியான அதிமுக ஆதரவு

AIADMK MP NaveethaKrishnan supports J and K bifurcation டெல்லி: ஜம்மு- காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதற்கு அதிமுக சார்பில் ஆதரவு தெரிவித்துக் கொள்வதாக எம்பி நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார். ஜம்மு- காஷ்மீரில் கடந்த சில தினங்களாக பதற்றம் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று காலை பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. 

இதைத் தொடர்ந்து அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுகளை அறிவிப்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் வெளியிட்டார். அப்போது ஜம்மு- காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது.

மேலும் மாநில அந்தஸ்தையும் ஜம்மு காஷ்மீர் இழந்தது. இந்த நிலையில் ஜம்மு- காஷ்மீர் மற்றும் லடாக் இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. இதற்கு பல்வேறு கட்சியினர் எதிர்ப்பும், ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மாநிலங்களவை எம்பி நவநீதகிருஷ்ணன் ஆதரித்து பேசினார். அவர் கூறுகையில் ஜெயலலிதா இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு ஆகியவற்றில் உறுதியாக இருந்தார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. எனவே அதிமுக, மத்திய அரசு கொண்டு வந்த இரு மசோதாக்களையும் ஆதரிக்கிறது என்றார்.

Comments