மன்மோகன்சிங் ராஜ்யசபா எம்.பி., ஆனார்

ஜெய்ப்பூர்: முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், ராஜஸ்தானில் போட்டியின்றி ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்வானார். மற்ற கட்சிகள் தரப்பில் யாரும் போட்டியிடாததால் அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. வெற்றி பெற்ற இவருக்கு மாநில முதல்வர் அசோக் கெலாட் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இங்கு ராஜ்யசபா எம்.பியாக இருந்த மதன்லால் சைனீ காலமானதை அடுத்து இந்த பதவிக்கு மன்மோகன்சிங் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

முன்னாள் பிரதமரான, மன்மோகன் சிங், 86, கடந்த, 18 ஆண்டுகளாக, அசாம் மாநிலத்திலிருந்து ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்டு, எம்.பி.,யாக பதவி வகித்தார்; சமீபத்தில், அவரது பதவிக் காலம் முடிவடைந்தது.

Comments