
சேலம் மாவட்டத்தில், 2011, கணக்கெடுப்பின்படி, 34 லட்சத்து, 82 ஆயிரத்து, 56 பேர் வசிக்கின்றனர். இதில், நான்கு வருவாய் கோட்டங்கள், 13 தாலுகாக்கள், 20 ஊராட்சி ஒன்றியங்கள், நான்கு நகராட்சிகள், 33 பேரூராட்சிகள், 385 ஊராட்சிகள் உள்ளன. இதில், 11 சட்டசபை தொகுதிகள் உள்ளன. சேலத்திற்கு அடுத்த பெரிய நகரமாக, ஆத்துார் விளங்குகிறது.
ஆத்துாரை தலைமையிடமாக வைத்து, புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக, கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆத்துாரில் இன்று நடக்கும் விழாவில், முதல்வர், இ.பி.எஸ்., புதிய மாவட்டம் குறித்த அறிவிப்பை வெளியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Comments