
இந்த நிலையில் காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா குறித்த விவாதத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு பேசும் போது ஜனநாயகத்திற்கு விரோதமாக மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் விவாதம் இன்றி குடியரசுத்தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரை இரண்டாக பிரிப்பதால் ஏற்படும் விளைவுகள் என்ன?; மாநில அரசை நகராட்சி போல மத்திய அரசு நடத்த முயற்சிக்கிறது” என்றார். பாஜக எம்.பி.க்கள் சிலர் குறுக்கிட்டு கூச்சல் குழப்பம் ஏற்படுத்தினர். அப்போது ஓபிஎஸ் மகனும் தேனி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான ரவீந்திரநாத் குமார் குறுக்கிட்டார். அதற்கு திமுக எம்.பி. டி.ஆர் பாலு இது முதுகெலும்பு உள்ளவர்கள் பேசும் இடம்; உங்களுக்கு முதுகெலும்பு இல்லை; உட்காருங்கள்” என்று ஆவேசமாக கூறினார். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
Comments