
இந்திய உளவுத்துறைக்கு கடந்த சில நாட்களுக்கு முன் முக்கிய தகவல் ஒன்று வந்தது, அதன்படி, அமர்நாத் யாத்திரைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் காஷ்மீரில் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தீவிரவாத தாக்குதல் மட்டுமில்லாமல், ராணுவ தாக்குதல் கூட நடக்கலாம். அதனால் இந்திய ராணுவம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டது. இதனால்தான் தற்போது அங்கு ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு வருகிறார்கள்.
அதன்படி காஷ்மீரை முழுக்க கட்டுப்பாட்டிற்கு கொண்டு வர தற்போது ஆபரேஷன் சிவா செயல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஆபரேஷனை மூன்று கட்டங்களாக செய்ய இந்திய ராணுவம் முடிவெடுத்து உள்ளது. இதை குறைந்த வீரர்கள் கொண்டு செய்ய முடியாது என்பதால், கூடுதலாக வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.
என்ன ஆபரேஷன்
அதன்படி காஷ்மீரை முழுக்க கட்டுப்பாட்டிற்கு கொண்டு வர தற்போது ஆபரேஷன் சிவா செயல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஆபரேஷனை மூன்று கட்டங்களாக செய்ய இந்திய ராணுவம் முடிவெடுத்து உள்ளது. இதை குறைந்த வீரர்கள் கொண்டு செய்ய முடியாது என்பதால், கூடுதலாக வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.
அடுத்து என்ன
அடுத்தபடியாக காஷ்மீரில் ஏற்கனவே ஊடுருவி இருக்கும் விஷமிகளை, தீவிரவாதிகளை களை எடுக்க வேண்டும். ஆனால் இது அமர்நாத் யாத்திரையை பாதிக்கும். வெளிநாட்டு மக்கள் இந்த யாத்திரைக்காக வந்துள்ளனர். இதனால்தான் அமர்நாத் யாத்திரைக்கு வந்திருக்கும் மக்களை உடனே வெளியேற சொல்லி உள்ளனர்.
தேடுதல் வேட்டை
மக்கள் எல்லோரும் வெளியேறிய பின், அங்கு ஏற்கனவே ஊடுருவி இருக்கும் தீவிரவாதிகள், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் அகற்றப்படுவார்கள். இது தொடர்பாக ஏற்கனவே இந்திய ராணுவம் நடத்திய தாக்குதல் மூலம் 7 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். இந்திய ராணுவத்தின் அதிரடி காரணமாக பாகிஸ்தான் வீரர்கள் 7 பேர் அதிரடியாக சுட்டு வீழ்த்தப்பட்டனர்.
கடைசி
இதற்கு அடுத்தபடியாக காஷ்மீரில் புதைக்கப்பட்டு இருக்கும் கண்ணிவெடிகளை அகற்றிவிட்டு, மொத்தமாக ராணுவத்தை அனைத்து பள்ளத்தாக்கில் இறக்கி காஷ்மீரை முழு கட்டுப்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிட்டு இருக்கிறார்கள். இன்று மாலையில் இருந்து இதற்கான பணிகள் துவங்கும் என்கிறார்கள். காஷ்மீர் முழுக்க வீரர்கள் களமிறங்கி, மாநிலம் மொத்தத்தை கட்டுப்படுத்துவார்கள் என்று கூறப்படுகிறது.
Comments