
இந்தியாவில் தான் அமேசானுக்கு சொந்த கட்டிடம் இந்த வகையில் அமேசான் இந்தியாவில் தனது மிகப் பெரிய சொந்த கட்டிடத்தை, ஹைதாராபாத்தில் ஓபன் செய்துள்ளது. இது குறித்து பேசியுள்ள அமேசான் இந்தியாவின் மூத்த தலைவர், அமித் அகர்வால், அமேசான் அமெரிக்காவிற்கு வெளியே அமேசான் சொந்தமாக கட்டும் முதல் அலுவலகம் இதுவேயாகும். இங்கு மொத்தம் 15000 பணியாளர்கள் வேலை செய்ய முடியும் என்றும், இது மொத்தம் 1.8 மில்லியன் சதுர அடியில் அமைக்கப்பட்டு உள்ளது என்றும் கூறியுள்ளார்.
மொத்த கட்டிடம் 3 மில்லியன் சதுர அடி இந்த அலுவலகம் மொத்தம் 9.5 ஏக்கரில் உள்ளது. ஹைதராபாத்தில் நானாகிராம்குடாவில் இது அமைந்துள்ளது. 1.8 மில்லியன் சதுர அடியில் இந்த வேலை குறித்தான கட்டிடம் அமைக்கப்பட்டிருந்தாலும், மொத்த கட்டிடம் 3 மில்லியன் சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் அலுவலக கட்டிடம், மற்றும் பல வசதிகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
972பேர் செல்லும் அளவுக்கு லிப்ட் வசதி இதுதவிர இண்டர்பெர்த் பிரார்த்தனை அறைகள், தாய்மார்களின் அறை, நிம்மதியான ஒய்வுக்காக அமைதியான ரூம்கள், மழை, ஹெலிபேட் என்றும், இன்னும் பல அம்சங்களுடன் அமைந்துள்ள இந்த கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளதாம். அது தவிர ஒரே நேரத்தில் 972 பேரை நகர்த்தக் கூடிய லிப்ட் வசதியும் அமைக்கப்பட்டுள்ளதாம். குறிப்பாக 290 கான்ப்ரன்ஸ் ரூம்களும், மேலும் ஒவ்வொரு தளத்திலும் 3 ஸ்கிரம் எனப்படும் மீட்டிங் ஹால்கள் அமைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
பணியாளர்கள் இங்கு விரைவில் வருவார்கள் இங்கு பணியாற்ற புதிய பணியாளர்கள் விரைவில் வருவார்கள் என்றும், குறிப்பாக சாப்ட்வேர் இன்ஜினியர்கள், மெஷின் லேர்னர், டேட்டா சைண்டிஸ்ட், நிதித் துறையை சேர்ந்தவர்கள் மற்றும் தயாரிப்பு மேலாளர்கள் என கலவையாக இருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. அதிலும் இந்தியாவில் தற்போது 62,000 முழு நேர பணியாளர்கள் உள்ளனர். இது அமெரிக்காவுக்கு வெளியே மிக அதிகமான அளவில் பணியாளர்கள் இருப்பது இந்தியாவில் தான் என்றும், இதில் மூன்றில் ஒரு பங்கு ஊழியர்கள் தற்போது ஹைதாராபாத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர அமேசான் ஏற்கனவே 1.55 லட்சம் ஒப்பந்த ஊழியர்களை பயன்படுத்தி வருகிறது என்றும் தெரிவித்துள்ளது.
Comments