காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து.. குடியரசு தலைவர் அறிவிக்கை

President aproves revoking all provisions of Article 370 டெல்லி: காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப் பிரிவு 370ஐ நீக்கி குடியரசுத் தலைவர் அறிவிக்கை வெளியிட்டுள்ளார். அதை உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் அறிவித்தார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர் என இரு யூனியன் பிரதேசங்களாக மாற்றக்கூடிய சட்ட மசோதாவை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார் உள்துறை அமைச்சர் அமித் ஷா. 

முன்னதாக, சட்டப்பிரிவு 370ன்கீழ் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்தாகிறது என்று குடியரசுத் தலைவர் அறிவிக்கை வெளியிட்டிருந்தார். அது ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பின்படி, உடனடியாக ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுகிறது. அமித்ஷா தாக்கல் செய்துள்ள சட்ட மசோதா நாடாளுமன்றத்திலும் நிறைவேறினால், குடியரசு தலைவர் ஆணை நிலைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசின் இந்த அதிரடி மற்றும் அவசர நடவடிக்கைகளை பார்த்தால் மீண்டும் இந்தியாவில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது போன்ற சூழ்நிலை உருவாகி உள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

Comments