சூடான் போல காஷ்மீரை மாற்ற போகிறீர்கள்.. ரத்தம் கொதிக்கிறது.. நாட்டையே திரும்பி பார்க்க வைத்த வைகோ!

எப்படி டெல்லி: காஷ்மீரை சூடான் போல மாற்ற போகிறீர்கள்.. என் இதயம் கொதிக்கிறது என்று 370 சட்டப்பிரிவு நீக்கத்திற்கு எதிராக ராஜ்ய சபாவில் மதிமுக எம்பி வைகோ கடுமையாக பேசியுள்ளார். அதிரடி திருப்பமாக ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு உரிமைகளை வழங்கக் கூடிய அரசியல் சாசனத்தின் 370 பிரிவை நீக்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இது மட்டுமில்லாமல் மத்திய பாஜக அரசு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை, ஜம்மு காஷ்மீர், லடாக் என்று இரண்டாக பிரிப்பதாக அறிவித்துள்ளது.

இதற்கு எதிராக ராஜ்யசபாவில் வைகோ பேசியது நாட்டையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. 370 சட்டப்பிரிவை எதிர்த்து வைகோ மிக கடுமையான வாதங்களை அவையில் வைத்தார்.

வைகோ பேச்சு வைகோ தனது பேச்சில், ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து காஷ்மீர் மக்களின் உணர்வுகளோடு விளையாடிவிட்டனர். நீங்கள் இங்கு அவையில் மசோதாவிற்கு எதிராக பேசும் நபர்களை நீக்கலாம். வெளியே அனுப்பலாம். கோடி காஷ்மீரி மக்களை எப்படி வெளியே அனுப்புவீர்கள். காஷ்மீரில் மிகப்பெரிய சிக்கலை நீங்கள் சந்திக்க போகிறீர்கள்.

என் இதயம் என் இதயம் கொதிக்கிறது. என் இதயத்தில் நெருப்பு எரிகிறது. காஷ்மீர் கொசாவோ, கிழக்கு திமோர், சூடான் போல, ஈராக் போல மாற கூடாது. நீங்கள் அப்படித்தான் தற்போது செய்து கொண்டு இருக்கிறீர்கள். உங்களுக்கு ஜனநாயகத்தில் கொஞ்சம் விருப்பம் இருந்தாலும், நான் பேசுவதை கொஞ்சம் கேளுங்கள்.

அந்தஸ்து ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்தது அரசியலமைப்பை இரண்டாக கிழிக்கும் செயல். இனி வெளிநாட்டு அழுத்தம் காஷ்மீரில் இருக்கும். நீங்கள் அங்கு என்ன செய்வீர்கள். அமெரிக்க அதிபர் டிரம்ப் காஷ்மீர் பிரச்சனையை கூர்ந்து கவனித்துக் கொண்டு இருக்கிறார்.

எப்படி சீனாவும், பாகிஸ்தானும் காஷ்மீரை மிகவும் நெருக்கமாக கவனித்து வருகிறது. நீங்கள் அவர்களுக்கு தேவையான விஷயங்களை எல்லாமே அப்படியே செய்து இருக்கிறீர்கள். உங்களின் இந்த செயலை நாங்கள் ஒருபோதும் ஆதரிக்க மாட்டோம். இந்திய ஜனநாயகத்தில் நாம் வெட்கப்பட வேண்டிய நாள் இன்று என்று வைகோ குறிப்பிட்டுள்ளார்.

Comments