அ.தி.மு.க.,வுடன் தீபா பேரவை இணைந்ததாக அறிவிப்பு

அண்ணன் மகள்,A.D.M.K,ADMK,Deepa,à®….தி.மு.க,அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்,ஜெ.,தீபாசென்னை: ''எம்.ஜி.ஆர்., அம்மா - தீபா பேரவை, அ.தி.மு.க.,வில் இணைக்கப்படும்,'' என, ஜெ., அண்ணன் மகள், தீபா கூறினார். 

இதுகுறித்து அவர் அளித்த பேட்டி: என் அத்தை, ஜெயலலிதா, தனக்கு பின், 100 ஆண்டுகள், அ.தி.மு.க., இருக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருந்தார். அவரது லட்சியக் கனவை நிறைவேற்ற, நாங்கள் நடத்தி வந்த இயக்கத்தை, அ.தி.மு.க.,வில் இணைக்க முடிவு செய்தோம். என் உடல்நிலை பாதிக்கப்பட்டதால், தீவிர அரசியல் பணிகளோ, அலுவலகப் பணிகளோ செய்ய முடியாமல், ஓய்வெடுக்கும் நிலையில் உள்ளேன். தொண்டர்கள் விருப்பத்திற்கு ஏற்ப, இனி, தீபா பேரவை, அ.தி.மு.க.,வுடன் இணைந்து செயல்படும். எவ்வித நிபந்தனையுமின்றி இணைந்து உள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார். சமீபத்தில், அரசியலிலிருந்து விலகுவதாக, தீபா அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Comments