
இதனையடுத்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை சந்தித்து காஷ்மீர் பிரச்சனை குறித்து பேசியதாக சொல்லப்படுகிறது. அப்போது நிருபர்கள் மத்தியில் பேசிய ட்ரம்ப் நிச்சயமாக நான் இந்தியா, பாகிஸ்தான் இடையிலான காஷ்மீர் பிரச்சினையில் என்னால் உதவ முடியும். இரு நாடுகளும் விரும்பினால், காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யும் நபராக இருக்க விரும்புகிறேன் என்று கூறினார். இதனையடுத்து காஷ்மீர் பிரச்சனையில் அமெரிக்கா தலையிடுவதை விரும்பாத இந்தியா இதில் அமெரிக்கா தலையிடுவது உள்நோக்கம் கொண்டதாக இருக்கும் என்ற சந்தேகத்தில் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்தை நீக்கியது.
மேலும் ஒருவேளை அமெரிக்கா இந்த விஷயத்தில் நடுவர் போல் செயல்பட்டு காஷ்மீர் மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தினால் அது பாகிஸ்தானிற்கு சாதகமாக போவதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்து விடும் என்று எண்ணியது. இந்த விளைவை நினைத்து பார்த்து தான் மத்திய அரசு அந்த மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்த்து அளிக்கும் விதி எண் 370 ரத்து செய்து காஷ்மீரை இந்தியாவோடு இணைத்துக் கொண்டதாக ஒரு செய்திகள் வந்து கொண்டிருக்கிறது.
Comments