
ஜார்கண்ட் மாநிலத்தில், முதல்வர், ரகுபர் தாஸ் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது.இம்மாநிலத்தில், ஏலம் வாயிலாக, தனியாருக்கு, மதுக்கடைகள் நடத்தும் உரிமம் வழங்கப்பட்டு வந்தது. இதையடுத்து, 2017 முதல், மாநில அரசே, மதுக்கடைகளை நடத்த துவங்கியது.இதில், எதிர்பார்த்த வருவாய் கிடைக்காததை அடுத்து, 2019 ஏப்ரல் முதல், மதுக்கடைகள் நடத்தும் உரிமம், மீண்டும் தனியாருக்கே வழங்கப்பட்டது.
இந்நிலையில், மது விற்பனை மூலம், 1,500 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் நோக்கத்தில், மளிகை கடைகளிலும், மது விற்பனை செய்ய அனுமதி அளிக்க, கலால்துறை முடிவு செய்தது. ஆண்டுக்கு, 30 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டி, ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி செலுத்தும், மளிகை கடைகளுக்கு, மது விற்பனை செய்ய உரிமம் வழங்கலாம் என, கலால் துறை பரிந்துரை செய்துள்ளது. இந்த பரிந்துரை, முதல்வரின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த பரிந்துரையின் மீது, முதல்வர் அலுவலகம், சில கேள்விகளை எழுப்பி உள்ளது.
Comments