ஜம்மு காஷ்மீருக்கு யூனியன் பிரதேச அங்கீகாரம் என்பது தற்காலிகம்தான்.. அமித் ஷா புதிய அறிவிப்பு!

3 குடும்பம் டெல்லி: ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு இருக்கும் யூனியன் பிரதேச அங்கீகாரம் என்பது தற்காலிகம்தான், மீண்டும் இயல்பு நிலை திரும்பிய பின் அதற்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். அதிரடி திருப்பமாக ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு உரிமைகளை வழங்கக் கூடிய அரசியல் சாசனத்தின் 370 பிரிவை நீக்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இது மட்டுமில்லாமல் மத்திய பாஜக அரசு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை, ஜம்மு காஷ்மீர், லடாக் என்று இரண்டாக பிரிப்பதாக அறிவித்துள்ளது.

இந்த் நிலையில் சிறப்பு அதிகார சட்டம் 370 நீக்கம் குறித்து தற்போது உள்துறை அமைச்சர் அமித் ஷா ராஜ்ய சபாவில் விளக்கம் அளித்து வருகிறார். காலையில் இருந்து நடந்த விவாதங்களுக்கு அவர் விளக்கம் அளித்து வருகிறார்.

இந்த் நிலையில் சிறப்பு அதிகார சட்டம் 370 நீக்கம் குறித்து தற்போது உள்துறை அமைச்சர் அமித் ஷா ராஜ்ய சபாவில் விளக்கம் அளித்து வருகிறார். காலையில் இருந்து நடந்த விவாதங்களுக்கு அவர் விளக்கம் அளித்து வருகிறார்.

3 குடும்பம் 370-வது பிரிவால் 3 குடும்பங்கள்தான் ஆதாயமடைந்தன. ஜம்மு காஷ்மீர் பெண்களுக்கு எதிரானது 370-வது பிரிவு. 370-வது பிரிவை ரத்து செய்வதால் தீவிரவாதம் ஒழியும். ஜம்மு காஷ்மீரில் ரத்தம் சிந்துவதை நிறுத்தவே 370-வது பிரிவு ரத்து. ஜம்மு காஷ்மீரில் சுகாதாரத்துறை படுமோசமாக உள்ளது.

மக்கள் 370-வது பிரிவு இருப்பதால் மருத்துவர்கள் ஜம்மு காஷ்மீர் செல்ல மறுக்கின்றனர். 370-வது பிரிவு இருப்பதால் தொழில் முதலீடுகள் ஜம்மு காஷ்மீருக்கு கிடைக்கவில்லை. மொத்தம் மூன்று குடும்பங்கள்தான் இங்கு எல்லா பலன்களையும் அனுபவித்து வந்தது. தற்போது அதை நீக்கி இருக்கிறோம்.

நிரந்தரம் இல்லை காஷ்மீருக்கு தற்போது யூனியன் பிரதேச அந்தஸ்து என்பது தற்காலிகமானதுதான். மீண்டும் இயல்பு நிலை திரும்பிய பிறகு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும். லடாக் எப்போதும் யூனியன் பிரதேசமாக இருக்கும். இது தற்காலிகம்தான், என்று அமித் ஷா குறிப்பிட்டு இருக்கிறார்.

Comments