
காஷ்மீர் மாநிலம் கெரான் செ்டார் பகுதியில், பாகிஸ்தான் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் ஊடுருவ முயன்றனர். அவர்களை திரும்பி செல்லும்படி, இந்திய ராணுவம் எச்சரிக்கை விடுத்தது. இதனை அவர்கள் கண்டுகொள்ளாததால், இந்திய ராணுவம் சுட்டதில், பாகிஸ்தான் வீரர்கள் 5 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். இந்திய ராணுவ வீரர்கள், தவறுதலாக, இந்திய எல்லையை தாண்டினால், அவர்களை கொன்று, உடலை சிதைப்பதை பாகிஸ்தான் வழக்கமாக வைத்துள்ளது.
இந்நிலையில், சுட்டுகொல்லப்பட்ட வீரர்கள் 5 பேரின் உடல்களை எடுத்து செல்ல வேண்டும் என்றால், பாகிஸ்தான் ராணுவத்தினர் வெள்ளைக்கொடியுடன் வர வேண்டும் என இந்திய ராணுவம் நிபந்தனை விதித்துள்ளது.
இது தொடர்பாக ராணுவ வட்டாரங்கள் கூறுகையில் ; பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் ராணுவம் உடந்தையாக இருந்து வருகிறது தெளிவாக இருந்தது. எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில், பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளுக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும். இவவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments