550 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்..!

மும்பை, சென்செக்ஸ் தற்போது சுமாராக 550 புள்ளிகள் சரிந்து வர்த்தகமகி வருகிறது. இன்று காலை சென்செக்ஸ் 37087 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது. தொடக்கம் முதலே ஒரு நிலையான இறக்கம் சென்செக்ஸில் இருந்தது. அந்த இறக்கம் மதியம் சுமார் 01.30 மணிக்குப் பிறகு அதிகமாகத் தொடங்கிவிட்டது.

தற்போதைய 3.15 நிலவரப்படி சரியாக சென்செக்ஸ் தன் நேற்றைய குளோசிங் புள்ளியை விட 557 புள்ளிகள் அதிக இறக்கத்தில் வர்த்தகமாகி வருகிறது. சென்செக்ஸில் இண்டெக்ஸில் பட்டியலிடப்பட்டு வர்த்தகமாகும் 30 பங்குகளில் டெக் மஹிந்திரா, டிசிஎஸ், ஹிந்துஸ்தான் யுனிலிவர், ஹெச் சி எல் டெக்னாலஜீஸ் போன்ற 4 பங்குகள் மட்டுமே ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகின்றன. மற்ற 26 பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாகி வருகின்றன. சென்செக்ஸ் இண்டெக்ஸில் பட்டியலிடப்பட்டிருக்கும் பங்குகளில் யெஸ் பேங்க், வேதாந்தா பஜாஜ் ஃபைனான்ஸ், டாடா மோட்டார்ஸ் போன்ற நிறுவனங்கள் அதிக இறக்கத்தில் வர்த்தகமாகி வருகின்றன. பி.எஸ்.இ-யில் இன்று 2,568 பங்குகள் வர்த்தகமாகி வருகின்றன. அதில் 504 பங்குகள் மட்டுமே ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகின்றன. 1,940 பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாகி வருகின்றன. 120 பங்குகள் விலை மாற்றமின்றி வர்த்தகமாகி வருகின்றன. மொத்தம் 2,560 பங்குகளில் 17 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 596 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாகி வருகின்றன. அதே போல தேசிய பங்குச் சந்தையான நிஃப்டியும் இன்ரு காலை முதலே கொஞ்சம் வலுவான இறக்கத்தில் வர்த்தகமாகி வந்தது. சென்செக்ஸ் போல மதியம் 01.30 மணிக்கு மேல் இறக்கம் அதிகமாகி, தன் நேற்றைய குளோசிங் புள்ளியை விட175 புள்ளிகள் அதிக இறக்கத்தில் வர்த்தகமாகி வருகிறது. நிஃப்டி 50 இண்டெக்ஸில் பட்டியலிடப்பட்டிருக்கும் 50 பங்குகளில் 6 பங்குகள் மட்டுமே ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகின்றன. மீதமுள்ள 44 பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாகி வருகின்றன. யெஸ் பேங்க், மாருதி சுசூகி, ரிலையன்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், ஹெச் டி எஃப் சி பேங்க் போன்ற பங்குகள் அதிக வால்யூம்களில் வர்த்தகமானாலும், விலை இறக்கத்தில் தான் வர்த்தகமாகி வருகின்றன.

Comments