
35ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள சில முக்கிய அம்சங்கள்:
காஷ்மீர் பகுதியை, 1947ல் இந்தியாவுடன் இணைப்பதற்காக, அப்போதைய மன்னர், ஹரி சிங் வேண்டுகோளின் படி, அரசியல் சாசன சிறப்பு பிரிவு, 370 ஏற்படுத்தப்பட்டது.
குடியுரிமை சலுகை கிடையாது
காஷ்மீரில் வசிக்கும், நிரந்தர குடியுரிமையினர் தவிர, நாட்டின் பிற மாநிலத்தவர், அங்கு நிலம் மற்றும் சொத்துகள் வாங்க முடியாது. காஷ்மீர் பெண், மற்ற மாநிலத்தவரை திருமணம் செய்தால், அந்த பெண்ணின் காஷ்மீர் குடியுரிமை ரத்தாகி விடும். 2002ல் காஷ்மீர் ஐகோர்ட், பெண்களுக்கு குடியுரிமை சலுகை உண்டு என தீர்ப்பு அளித்தது. ஆனால், அவர்களது குழந்தைகளுக்கு, குடியுரிமை சலுகை கிடையாது.
காஷ்மீர் மாநிலத்தை சாராதவர்கள், அம்மாநில அரசு வேலையில், இடம் பெற முடியாது. காஷ்மீர் மாநில அரசு கல்லுாரிகளில், மற்ற மாநிலத்தை சேர்ந்தவர்கள், சேர முடியாது. காஷ்மீர் அரசு வழங்கும் உதவித் தொகை, சமூகநலத் திட்டங்கள் என, எந்த நிதி உதவியும், நிரந்தர குடியுரிமை பெற்றவர்கள் மட்டுமே, பெற முடியும்.
எது செல்லுபடியாகும் ?
மாநில சட்டசபை இயற்றும் எந்தச் சட்டமும், அரசியல் சட்டத்துக்கோ, பிற சட்டத்துக்கோ முரணாக இருக்கிறது என, நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியாது. ஒட்டுமொத்த இந்திய அரசியல் சாசனமும், இங்கு செல்லுபடியாகாது. ராணுவம், வெளியுறவு, தகவல் தொடர்பு போன்ற சட்டங்கள் மட்டுமே செல்லுபடியாகும்.
புதிதாக சட்டம் ஏதும் நிறைவேற்ற வேண்டுமானால், மாநில அரசின் ஒப்புதல் அவசியம். இந்த பிரிவை திருத்த வேண்டுமானால், அரசியல் நிர்ணய சபையைக் கூட்ட வேண்டும். மாநில சட்டசபையின் ஒப்புதல் படியே, எந்த சட்டமும் இந்த மாநிலத்தில் செல்லுபடியாகும்.
Comments