விமானப்படை விமானம் மூலம் 326 சுற்றுலா பயணிகள் வெளியேற்றம்

விமானப்படை விமானம் மூலம் 326 சுற்றுலா பயணிகள் வெளியேற்றம்ஸ்ரீநகர்: காஷ்மீர் பாதுகாப்புக்காக மத்திய அரசு 28 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை ஜம்மு-காஷ்மீரில் கூடுதலாக குவித்துள்ளது.
இதனால் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்தை திரும்ப பெற்று விடுமோ? என்ற அச்சம் மக்கள் இடையே நிலவி வருகிறது. அமர்நாத் யாத்ரீகர்கள் செல்லும் பாதையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதால் யாத்ரீகர்கள் பயணத்தை முடித்துக் கொண்டு பள்ளத்தாக்கில் தங்கவேண்டாம்.

உடனடியான ஜம்மு-காஷ்மீரில் இருந்து வெளியேறுங்கள். அதேபோல் சுற்றுலாப் பயணிகளும் வெளியேறுங்கள் என்று வலியுறுத்தபட்டுள்ளது.இந்நிலையில் காஷ்மீரில் தங்கியிருந்த 11 ஆயிரத்திற்கு மேற்பட்ட சுற்றுலா பயணிகள் இருந்ததாகவும், அவர்கள் விரைவில் காஷ்மீரை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து நேற்று முதற்கட்டமாக326 பேர் இந்திய விமானப்படை விமானம் மூலம் ஸ்ரீநகரிலிருந்து வெளியேறினர். மீதமுள்ளவர்கள் படிப்படியாக வெளியேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Comments