
பாஜக அதாவது கிட்டத்தட்ட 3 லட்சம் இஸ்லாமிய வாக்குகள் உள்ளன. இந்த 3 லட்சத்தை யார் அள்ள போகிறார்களோ அவர்கள்தான் வெற்றியாளர்கள் என்பது பொதுவான கணிப்பு. அந்த வகையில் இந்த முறை வன்னியர் தரப்பு கதிர் ஆனந்துக்கும், முதலியார் தரப்பு ஏசிஎஸ்-க்கும் வாக்கு அளித்தாலும், இந்த 3 லட்சம் இஸ்லாமிய ஓட்டுக்களை பெரும்பான்மையாக பெற்றது திமுகதான்.
பாஜக இத்தனைக்கும் அதிமுக, பாஜகவை பல வகையில் ஒதுக்கி வைத்து, தன்னை முஸ்லீம்களுக்கு ஆதரவானவர்களாக காட்டிக் கொள்ள முனைந்தாலும், திமுகவுக்கே வெற்றி வாய்ப்பு சாதகமாகிறது. இதற்கு உதாரணம் வாணியம்பாடி, ஆம்பூர். ஒட்டுமொத்த வேலூர் தொகுதியில் வாணியம்பாடியில்தான் இஸ்லாமியர் ஓட்டுக்கள் அதிகம் ஆகும்.
ஆம்பூர் அதேபோல, நகர்ப்புற வாக்குகளிலும் திமுகதான் முன்னிலை பெற்றுள்ளது. அதற்கு உதாரணம் வேலூர். அதாவது இஸ்லாமிய, நகர்ப்புற என்ற இந்த இரண்டு வகையிலும் திமுக வாக்குகளை அள்ளி உள்ளது. அதனால்தான் மொத்தம் உள்ள 6 தொகுதிகளில் வேலூர், வாணியம்பாடி, ஆம்பூரில் மட்டுமே அதிக வாக்குகள் திமுகவுக்கு விழுந்துள்ளன.
நன்றி மற்ற 3 தொகுதிகள் திமுகவை கைவிட்டு விட்டதாகத்தான் தோன்றுகிறது. இல்லையென்றால், அதிமுகவால் திமுகவுக்கு இணையாக கடைசிவரை டஃப் கொடுக்க முடிந்திருக்காது. இதில் என்ன ஒருவேடிக்கை என்றால், 6 தொகுதிகளில் திமுக கவனம் செலுத்தியது அனைக்கட்டு தொகுதியில் என்றுதான் சொன்னார்கள். ஆனால் வேலூர், ஆம்பூர்,வாணியம்பாடி முந்திக் கொண்டு வந்து திமுகவை முன்னிலையில் வைத்துவிட்டது. இந்த 3 தொகுதி மக்களுக்கு திமுக எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும்!
Comments