
சென்னை: நிலவை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட சந்திராயன் 2 விண்கலத்தில் உள்ள கேமரா நேற்று(ஆக., 3) பூமியை படம் பிடித்தது. அதனை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

சந்திராயன் 2 விண்கலம் கடந்த ஜூலை 22ம் தேதி பிற்பகல் 2.45 மணிக்கு விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. இந்த விண்கலம், நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கி ஆய்வு செய்ய உள்ளது. தற்போது 4வது புவி வட்டப்பாதையை வெற்றிகரமாக கடந்து நிலவின் சுற்றுவட்ட பாதையை நோக்கி பயணித்து வருகிறது. ஆக., 6 ல் நிலவின் சுற்றுவட்டப்பாதைக்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், சந்திராயன் 2 விண்கலத்தில் உள்ள எல்ஐ4(LI4) கேமரா மூலம் நேற்று(ஆக.,3) சர்வதேச நேரப்படி மாலை 5.34 மணியளவில் பூமியை புகைப்படம் எடுத்துள்ளது. இந்த படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
Comments