காஷ்மீர் சிறப்பு அந்தஸ்த்து ரத்து: வேலை வாய்ப்பில் 10% இட ஒதுக்கீடு அமல்!

ரத்து செய்யப்பட்ட 370 சிறப்பு அந்தஸ்துநாடு முழுவதும் பொதுப்பிரிவில் பொருளாதார ரீதியாகப் பின்தங்கியவர்களுக்கு, கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, பொதுப்பிரிவினரில் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்குவது காஷ்மீருக்கும் பொருந்தும் என மசோதா திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

ஜம்மு - காஷ்மீர் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு ஜம்மு- காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. அந்த நிபந்தனைகளுக்கு பிறகுதான் ஜம்மு காஷ்மீர் மகாராஜா ஹரிசிங் இந்தியாவுடன் இணைய ஒப்புக் கொண்டார். இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு பிற மாநிலங்களைப் போல அல்லாமல் சில சிறப்பு உரிமைகள் அந்த மாநிலத்துக்கு வழங்கப்பட்டது. அதில், அரசியல் சாசனப்பிரிவு 370 தான் இந்த சிறப்பு உரிமைகளை காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்தது.

ரத்து செய்யப்பட்ட 370 சிறப்பு அந்தஸ்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த 370-வது பிரிவை மத்திய அரசு ஆகஸ்ட் 5ம் தேதியன்று (நேற்று) ரத்து செய்தது. இதற்கான தீர்மானம் மாநிலங்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது.

இனி எந்த சிறப்பும் இல்லை இந்த 370 சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ளதால் ஜம்மு காஷ்மீருக்கு என தனியே அரசியல் சாசனம், அதிகாரங்கள் இருக்காது. இந்தியாவில் பிறப்பிக்கப்படும் சட்டங்கள் அனைத்தும் காஷ்மீருக்குப் பொருந்தும். அதில், இனி அனைத்து துறை சார்ந்தும் மத்திய அரசு நிறைவேற்றும் மசோதாக்களை ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையின் சம்மதம் இல்லாமல் அங்கு அமலுக்குக் கொண்டு வர முடியும்.

10% இட ஒதுக்கீடு தற்போது ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யப்பட்டுள்ளதால் இந்தியாவில் பிற மாநிலங்களில் உள்ள பொதுப்பிரிவினரில் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கான 10 சதவிகித இட ஒதுக்கீடு முறை இங்கேயும் அமல்படுத்தப்படுகிறது. 10% இட ஒதுக்கீடு வழங்குவது காஷ்மீருக்கும் பொருந்தும் என்ற திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுவிட்டது.

வருமான உச்சவரம்பு குறைப்பு இந்த பொதுப்பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டில் 8 லட்சத்திற்கும் குறைவாக ஆண்டு வருவாய் உள்ளவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டது. இதுவரை சிறப்பு அந்தஸ்து பெற்றிருந்த ஜம்மு - காஷ்மீருக்கும் இந்த சட்டம் பொருந்தும் வகையில் திருத்தம் செய்யப்பட்டது. மேலும் வருமான உச்சவரம்பு என்பது ஜம்மு - காஷ்மீருக்கு 3 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டது.

திருத்தப்பட்ட மசோதா இந்த திருத்தப்பட்ட மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மாநிலங்களையில் தாக்கல் செய்தார். இந்த மசோதா மீது விவாதம் நடத்தப்பட்டு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. மக்களவையில் இந்த மசோதா ஜூலை 1-ம் தேதியே நிறைவேற்றப்பட்டுவிட்டது. அடுத்து மசோதா குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு விரைவில் சட்டமாக்கப்படும்.

Comments