
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக வடகிழக்கு பருவமழை பொய்த்து வருகிறது. இதனால் இந்த ஆண்டு கோடையில் வறட்சி நிலவியது. நீர் நிலைகள் முழுவதும் வறண்டுவிட்டன. இந்த நிலையில் மக்கள் குடிநீருக்காக நடையாய் நடந்தனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெப்பச்சலனத்தால் மழை பெய்து பூமியையும் மக்கள் மனங்களையும் குளிரவைத்தது.
பேஸ்புக் பதிவு
தென்மேற்கு பருவமழை ஆங்காங்கே தீவிரமடைந்து வரும் நிலையில் சென்னை உள்பட தமிழகத்துக்கு எப்போது மழை பெய்யும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் தனது பேஸ்புக் பதிவில் தமிழகத்துக்கான மழை குறித்து பதிவிட்டுள்ளார்.
நல்ல நாட்கள்
இதுகுறித்து அவர் தனது பேஸ்புக் பதிவில் கூறுகையில் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை உள்பட தமிழகத்துக்கு அங்கும் இங்கும் சில மழை பெய்து வருகிறது. ஆனால் வரும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி நல்ல நாட்கள் தொடங்குகிறது.
மழை நீர் சேகரிப்பு
வரும் 10-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை டமால், டுமீல் மழையும் ரேடாரில் ரெட் தக்காளி போல் மாறும். யாரெல்லாம் மழை நீர் சேகரிப்பு திட்டத்தை தொடங்காமல் உள்ளீர்களோ அவர்கள் உடனடியாக அதற்கான பணிகளில் இறங்குகள்.
நிச்சயம் பலன்
இன்னும் ஒரு வாரம் இருக்கிறது. அதற்குள்ளாகவே மழைநீர் சேகரிப்பை தொடங்குங்கள். அந்த காலகட்டத்தில் பெய்யும் மழை நீரை சேமித்தால் நிச்சயம் பலன் கிடைக்கும் என்ற அர்த்தத்தில் பிரதீப் ஜான் பதிவிட்டுள்ளார்.
Comments