
ஆடியோ இது நாளடைவில் மோதலாகவே இருந்து வந்தது. இந்த நிலையில் டிடிவி தினகரனை அமமுக நிர்வாகி ஒருவரிடம் தங்கதமிழ்ச் செல்வன் மிகவும் அவதூறான வார்த்தைகள் மூலம் வசைபாடிய ஆடியோ நேற்று முதல் வைரலாகி வருகிறது.
பாயுமா இந்த நிலையில் இன்றைய தினம் அடையாறில் உள்ள டிடிவி தினகரன் வீட்டில் தங்கதமிழ்ச் செல்வன் விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தங்கதமிழ்ச் செல்வன் மீது நடவடிக்கை பாயுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தகவல்கள் இந்த நிலையில் அமமுகவில் நிர்வாகம் சரியில்லை என்றும் நெல்லை மற்றும் கோவை மாவட்ட பொறுப்பாளர்களால் கட்சி அழிந்து வருகிறது என்றும் தங்கதமிழ்ச் செல்வன் ஊடகங்களில் பேட்டி கொடுத்தார். இதையடுத்து தங்கத்தமிழ்ச் செல்வனை தனியாக அழைத்து தினகரன் பேசியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
பொறுப்பு இல்லை அந்த சந்திப்பில் இந்த இருவர் தவிர யாரும் கலந்து கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. சந்திப்பின் போது தேனி மாவட்டத்தில் தினகரன் கடுமையையும் கோபத்தையும் வெளிப்படுத்தியதாக தெரிகிறது. வெகு விரைவில் பொறுப்பாளர்களை நியமனம் செய்வதாகவும் அச்சமயம் உங்களுக்கு (தங்கதமிழ்ச் செல்வன்) எந்த பொறுப்பும் வழங்கப்படாது.
அதிருப்தி உங்களிடம் உள்ள கொள்கை பரப்பு செயலாளர் பொறுப்பும் பறிக்கப்படும். எனவே நீங்கள் எந்த முடிவை எடுக்க வேண்டுமோ அதை எடுத்துக் கொள்ளுங்கள் என டிடிவி தினகரன் கூறியதாக தெரிகிறது. இதையடுத்தே தங்கதமிழ்ச் செல்வனை அழைக்காமல் தேனியில் ஒரு தினகரன் தரப்பு கூட்டம் கூட்டியதாகவும் இந்த கோபம்தான் ஆடியோவில் அதிருப்தியாக வெளியானதாகவும் தெரிகிறது.
Comments