பி.இ., கவுன்சிலிங் இன்று துவங்கியது

சென்னை: இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், இன்று(ஜூன் 25) துவங்கியது. இதில், ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்று தாங்கள் படிக்க விரும்பும் கல்லுாரிகளை தேர்வு செய்ய உள்ளனர்.

1.73 லட்சம் இடங்கள் :

பிளஸ் 2 முடித்து, இன்ஜினியரிங் படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கு, தமிழக உயர் கல்வித்துறை சார்பில், கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இந்த கவுன்சிலிங்குக்கு, 1.03 லட்சம் பேர், தரவரிசை பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இந்த ஆண்டு, 1.73 லட்சம் இடங்கள், அரசு ஒதுக்கீட்டு பிரிவில் உள்ளன.

மாற்று திறனாளிகள் :

இந்நிலையில், இன்ஜினியரிங் படிப்பிற்கான நேரடி ஒற்றை சாளர கவுன்சிலிங், இன்று துவங்கியது. இன்று, மாற்று திறனாளிகளுக்கும், நாளை, முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கும், நேரடி கவுன்சிலிங் நடக்கிறது. நாளை மறுநாள் விளையாட்டு பிரிவுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.

ஜூலை 3 ஆன்லைன் கவுன்சிங் :

நாளை முதல், 28ம் தேதி வரை, தொழிற்கல்வி மாணவர்களுக்கும், கவுன்சிலிங் நடக்கிறது. பொதுப் பாடப் பிரிவு மாணவர்களுக்கு, ஜூலை, 3ல், 'ஆன்லைன்' கவுன்சிலிங் துவங்க உள்ளது. இதற்காக, மாநிலம் முழுவதும், கவுன்சிலிங் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கூடுதல் தகவல்களை, tneaonline.in என்ற, இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Comments