
'நிறுவனத்தைத் தொடர்ந்து நடத்த முடியாத சூழல் ஏற்படும். அரசு தான் உதவ வேண்டும்' என அதன் அதிகாரிகள் கூறுகின்றனர்.
அரசுடைமையாக்கப்பட்ட பொதுத் துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்.லின் மூத்த பொது மேலாளர் புரன் சந்திரா, அதன் நிர்வாக குழு உறுப்பினராக இருக்கும் தொலைதொடர்பு துறை அமைச்சகத்தின் துணைச் செயலருக்கு கடிதம் எழுதி உள்ளார்.
அக்கடிதத்தில் 'மாத வருவாய்க்கும் நிறுவனத்தை நடத்துவதற்கான செலவுகளுக்கும் இடையே மிகப் பெரும் இடைவெளி ஏற்பட்டுள்ளது; அரசிடம் இருந்து நிதியுதவி கிடைக்காவிட்டால் நிறுவனத்தை தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டு விடும்' என குறிப்பிட்டுள்ளார்.ஏற்கனவே இது தொடர்பாக கடந்த வாரம் அனைத்திந்திய பட்டதாரிபொறியாளர்கள் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் சார்பில் பிரதமருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிறுவனம் 2008 - 09 ஆண்டில் தான் 575 கோடி ரூபாய் லாபம் ஈட்டியது. அதன் பின் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வரும் இந்நிறுவனத்தின் தற்போதைய மொத்த கடன் 30 ஆயிரம் கோடி ரூபாய்.இ ந்நிறுவனத்தில் 1.7 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.அதிக சம்பளம் மோசமான நிர்வாக செயல்பாடுகள் அரசின் தேவையற்ற தலையீடுகள் நவீனப்படுத்துவதில் தாமதம் ஆகியவை இந்நிறுவனம் நலிவடையக் காரணங்களாக அமைந்து விட்டன.
Comments