
சமீபத்திய லோக்சபா மற்றும் தமிழக இடைத்தேர்தலில் அமமுக பெரும் தோல்வியை சந்தித்தது. இதனையடுத்து கட்சியில் இருந்து முக்கிய பொறுப்பாளர்கள் விலகி அதிமுக மற்றும் திமுகவில் சேர்ந்து வருகின்றனர். முதல்வர் இபிஎஸ் குறித்தும் தங்கதமிழ்செல்வன் பாராட்டி பேசி இருந்தார். இதுவும் கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியது. தங்க தமிழ்செல்வன் அதிமுகவுக்கு தாவப்போவதாகவும் செய்திகள் பரவின. இதனை அவர் மறுக்கவும் செய்தார்.
இந்நிலையில் அவர் தினகரன் குறித்து பேசிய ஆடியா சமூகவலை தளங்களில் பரவியது. இதனை தொடர்ந்து தங்கதமிழ்செல்வன் கட்சியில் இருந்து வெளியேறுவார் என தெரிகிறது. இந்த விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக அடையாறில் தினகரன் வீட்டில் ஆலோசனை நடத்தி வருகிறார்.
தங்கம் பேசியது என்ன ?
ஆடியோவில் தங்க தமிழ்செல்வன் பேசியுள்ளதாவது: எங்கப்பா அவர் இருக்கிறாரா... உங்க அண்ணன் இருக்காரா... இந்த மாதிரி பேடித்தனமா அரசியல் செய்வதை நிறுத்தச் சொல்லுப்பா உங்க அண்ணனை.உண்மையில் நான் விஸ்வரூபம் எடுத்தால் நீங்கள் அழிந்து போவீங்க... நீ உட்பட அழிந்து போவீங்க... நான் நல்லவன். தேனி மாவட்டத்தில் கூட்டம் போடுகிறாயா... நான் மதுரையில் கூட்டம் போடுகிறேன்; என்ன நடக்கிறது என்று பார்.இந்த மாதிரி ஒரு பேடித்தனமான அரசியல் பண்ண வேணாம்னு தினகரனிடம் சொல்லிடு. இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
Comments