
6 எம்.பி.,க்கள் ;
தமிழகத்திலிருந்து அதிமுக சார்பில் 4 எம்.பி.,க்கள், இ.கம்யூ., எம்பி டி.ராஜா ஆகியோர் பதவிக்காலம் முடிகிறது. லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு வென்றதால், திமுகவின் கனிமொழி ராஜ்யசபா எம்.பி., பதவியை ராஜினாமா செய்திருந்தார். எனவே, தமிழகத்தில் 6 எம்.பி., காலியிடங்கள் உள்ளன.
ஜூலை 1ல் வேட்பு மனு :
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பில், ''வரும் ஜூலை 1ல், ராஜ்யசபாவுக்கான வேட்பு மனுத் தாக்கல் தொடங்கும். ஜூலை 8 வேட்பு மனுத்தாக்கலுக்கு கடைசி நாளாகும்.தேர்தலில் போட்டி வந்தால், ஜூலை 18 ல் தேர்தல் நடைபெறும். அன்று காலை 9 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெறும்,'' என்று தெரிவித்துள்ளது.
தலா 3 எம்.பி., வாய்ப்பு :
ஒரு ராஜ்யசபா எம்.பி.,யை தேர்ந்தெடுக்க, 34 எம்.எல்.ஏ.,க்கள் தேவை. அந்தவகையில், தற்போதுள்ள தமிழக சட்டமன்ற பலத்தில், அ.தி.மு.க., மற்றும் தி.மு.க.,விற்கு தலா 3 எம்.பி.,க்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
Comments