ஜெயலலிதா வீட்டை முடக்கிய வருமான வரித்துறை

சென்னை ஐகோர்ட், போயஸ் கார்டன்,  வருமான வரித்துறைசென்னை: ரூ.16.75 கோடி வருமான வரி பாக்கிக்காக, ஜெயலலிதா வசித்த போயஸ் கார்டன் இல்லத்தை கடந்த 2007 ம் ஆண்டு முதல் முடக்கி வைத்துள்ளதாக வருமான வரித்துறை, சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பதில் மனுவில் கூறியுள்ளது.

நோட்டீஸ்

ஜெயலலிதா வசித்த போயஸ் கார்டன் இல்லத்தை நினைவில்லமாக மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த ஐகோர்ட், பதில் அளிக்க வருமான வரித்துறைக்கு உத்தரவிட்டிருந்தது.

ஆட்சேபனை இல்லை

இந்நிலையில், வருமான வரித்துறை தாக்கல் செய்த பதில் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: ரூ.16.74 கோடி வருமான வரி பாக்கிக்காக கடந்த 2007ம் ஆண்டு முதல் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீடு முடக்கி வைக்கப்பட்டு உள்ளது. சென்னை அண்ணா சாலை, மேரிஸ் சாலை, ஐதராபாத்தில் உள்ள சொத்துகளும் முடக்கி வைக்கப்பட்டு உள்ளன. வரி பாக்கியை செலுத்தி விட்டால் ஜெயலலிதா வீட்டை நினைவில்லமாக மாற்ற ஆட்சேபனை இல்லை எனக்கூறப்பட்டு உள்ளது.

ஒத்திவைப்பு

இதனையடுத்து, நிலத்தை கையகப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தது.

Comments