கவர்னர் மாளிகை முன் ஆர்ப்பாட்டம்: திமுகவினர் கைது

சென்னை : கோடநாடு கொள்ளை மற்றும் கொலை சம்பவம் தொடர்பாக முதல்வர் பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், முதல்வர் பதவி விலக வேண்டும் எனவும் கவர்னர் மாளிகை முன் இன்று போராட்டம் நடத்த உள்ளதாக திமுக அறிவித்திருந்தது. கவர்னர் மாளிகை நோக்கி செல்ல திமுக.,வினருக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். தடுப்புகளை கடந்து திமுக.,வினர் முன்னேறிச் செல்ல முயன்றதால் போலீசாருக்கும், திமுக.,வினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

தொடர்ந்து, கோடநாடு விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, கவர்னர் மாளிகை முன் ஆர்ப்பாட்டம் நடத்திய திமுகவினரை போலீசார் கைது செய்தனர். இதனை கண்டித்து சைதாப்பேட்டையில் திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Comments