
ஆர்கே நகர் இடைத்தேர்தலில், சுயேட்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட தினகரன், இடைத்தேர்தல் மற்றும் லோக்சபா தேர்தலில் போட்டியிட தங்களுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க வேண்டும் எனக்கூறி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரணைக்கு ஏற்று கொண்ட சுப்ரீம் கோர்ட் பதில் அளிக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது.
இந்த வழக்கிற்கு தேர்தல் ஆணையம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், அமமுக அங்கீகரிக்கப்பட்ட கட்சி இல்லை என்பதால், குக்கர் சின்னத்தை நிரந்தரமாக ஒதுக்க முடியாது. தேர்தல் ஆணையத்தில் உள்ள ஒரு பொதுவான சின்னத்தை அங்கீகரிக்கப்பட்ட கட்சிக்கு மட்டுமே வழங்க முடியும். பொதுப்பட்டியலில் உள்ள ஒரு சின்னத்தை தனிப்பட்ட கட்சி உரிமை கோர முடியாது எனக்கூறப்பட்டுள்ளது.
Comments