லோக்சபா தேர்தல்.. போட்டியிட மாட்டோம் என உறுதியாக சொல்ல முடியாது... மய்யத்தில் கமல்ஹாசன்

We Can Not say Surely Will Not Contest in Lok Sabha Election - kamalhassan சென்னை : மக்களவை தேர்தலில் உறுதியாக போட்டியிட மாட்டோம் என சொல்ல முடியாது என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னையில் தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பேசியதாவது: தமிழகம் பெரிய சோதனைகளை சந்திக்க உள்ளது. அதை மாணவர்கள் எதிர்கொள்ள வேண்டும் என்றார்.
தமிழக அரசியலில் முதலில் ஊழலை ஒழிக்க வேண்டும். மகிழ்ச்சியாக இருப்பதில் மற்ற நாடுகளை விட நாம் பின்தங்கி இருக்கிறோம். மேலும், தாமதமாக அரசியல் பிரவேசம் எடுத்ததால் வருத்தம் உள்ளது என்றும் தெரிவித்தார். மக்களவை தேர்தலில் உறுதியாக போட்டியிட மாட்டோம் என சொல்ல முடியாது என்றும் நிலைமையை பொறுத்து முடிவெடுப்போம் என்றும் அவர் கூறினார்.

Comments