
பொதுப்பிரிவில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் சமீபத்தில் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது. மத்திய அரசு பணிகளில் 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் வரும் பிப்ரவரி 1 முதல் அமல்படுத்தப்பட உள்ளது. இந்நிலையில் மத்திய அரசு கொண்டு வந்த இடஒதுக்கீட்டு சட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனுவை இன்று விசாரித்த சுப்ரீம் கோர்ட், இந்த சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்டது.
மேலும், இடஒதுக்கீட்டு சட்டம் தொடர்பாக 4 வாரங்களில் பதிலளிக்க மத்திய அரசுக்கு நோடீஸ் அனுப்பி உள்ளது. இந்த பதிலை அறிக்கையாக தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Comments