கொடநாடு விவகாரம்: 7 பேரும் முதல்வர் குறித்து பேச தடை!!! பதிலளித்த பத்திரிகையாளர் மேத்யூஸ் சாமுவேல்

methews samuelகொடநாடு விவகாரத்தில் மேத்யூஸ் சாமுவேல் , சயான் உள்ளிட்ட 7 பேர் முதல்வர் பற்றி பேச சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. ஆதாரமில்லாத ஆவணங்களை வெளியிடவும் தடை விதித்து இந்த வழக்கின் விசாரணையை ஜனவரி 30ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது உயர்நீதிமன்றம். 
இதற்கு பதிலளித்த மேத்யூஸ் சாமுவேல் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்கிறேன், உயர்நீதிமன்ற தீர்ப்பு கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது. தீர்ப்பை எதிர்த்து வழக்கு தொடர்வது குறித்து டெல்லியில் வழக்கறிஞர்களுடன் ஆலோசனை செய்ய உள்ளேன் எனவும் கூறியுள்ளார்.

Comments