'பி.எஸ்.எல்.வி., - சி 44' ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது

pslv c44,பி.எஸ்.எல்.வி., - சி 44,ராக்கெட்,இன்று,விண்ணில் பாய்கிறதுசென்னை: நாட்டின் எல்லை பகுதிகளை கண்காணிக்கும் செயற்கைகோளை, 'பி.எஸ்.எல்.வி., - சி 44' ராக்கெட் உதவியுடன், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான, 'இஸ்ரோ' இன்று, விண்ணில் செலுத்துகிறது.

ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, பி.எஸ்.எல்.வி., - ஜி.எஸ்.எல்.வி., ரக ராக்கெட்கள் உதவியுடன், செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது, இஸ்ரோ. இந்த செயற்கைகோள்கள், நாட்டின் பாதுகாப்பு, தகவல் தொடர்பு உள்ளிட்ட ஆய்வு பணிகளுக்கு பயன்படுகின்றன. 

தற்போது, புவி அமைப்பு மற்றும் நாட்டின் எல்லை பகுதிகளை கண்காணிக்க, 'மைக்ரோசாட் - ஆர்' என்ற, இமேஜிங் செயற்கைகோளை, இஸ்ரோ தயாரித்துள்ளது. இதனுடன், மாணவர்கள் உருவாக்கியுள்ள, 'கலாம்சாட்' என்ற, குறைந்த எடை உடைய செயற்கைகோளையும் சுமந்தபடி, 'பி.எஸ்.எல்.வி., - சி 44' ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து, இன்று இரவு, 11:40 மணிக்கு விண்ணில் பாய்கிறது. இதற்கான, கவுன்ட் - டவுன், நேற்றிரவு துவங்கியது.

Comments