
குடியரசு தின விழாவை முன்னிட்டு உ.பி., அரசின் சாதனைகள் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து துறைகளின் சாதனைகள் குறித்த விபரத்தை அனுப்பி வைக்கும்படி மாவட்ட கலெக்டர்களுக்கு உ.பி., தலைமை செயலாளர் அனுப் சந்திர பாண்டே உத்தரவிட்டிருந்தார். இதில் உ.பி., காவல்துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், யோகி ஆதித்யநாத் ஆட்சி பொறுப்பேற்ற முதல் 16 மாதங்களில் 3000 க்கும் மேற்பட்ட என்கவுன்டர்கள் நடத்தப்பட்டுள்ளது. இதில் 78 கிரிமினல்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இது 2017 மார்ச் முதல் 2018 ஜூலை மாதம் வரையிலான புள்ளிவிபரம்.
இந்த கால அளவில் 7043 கிரிமினல்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 838 கிரிமினல்கள் காயமடைந்துள்ளனர். 11,981 கிரிமினல்களின் ஜாமின் ரத்து செய்யப்பட்டு, கோர்ட்டில் சரணடைய வைக்கப்பட்டுள்ளனர். சிறப்பு காவல் படையினரால் 9 கிரிமினல்கள் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 139 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சராசரியாக ஒரு நாளைக்கு 6 என்கவுன்டர்கள் நடத்தப்பட்டு, 14 கிரிமினல்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொரு மாதமும் சுமார் 4 கிரிமினல்கள் என்கவுன்டரில் கொல்லப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments