***Exclusive 9 மகன்களை பெற்றும் வறுமை.. சினிமா வாய்ப்பில்லை.. மெரினாவில் கைக்குட்டை விற்கும் நடிகை ரங்கம்மாள்

நடிகைகளுக்கு டூப் சென்னை: திரைப்படங்களில் ரசிகர்களை மகிழ்வித்த ரங்கம்மாள் பாட்டி, வறுமை காரணமாக மெரினா கடற்கரையில் 'கர்சீப்' விற்று பிழைப்பை நடத்தி வருகிறார். அவருக்கு நடிகர் சங்கம் உதவவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. தமிழ் சினிமாவில் திரைப்படங்களில் நடிகர் வடிவேலுவுடன் இணைந்து பல்வேறு படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்தவர், கே.ஆர்.ரங்கம்மாள் (75). சென்னை வடபழனி குமரன் காலனியில் வசித்து வருகிறார். இவரது காமெடி ரசிக்கும்படி இருக்கும். குறிப்பாக வடிவேலுவுடன் இவர் இணைந்து நடித்துள்ள காமெடிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. காமெடி வேடங்களில் நடித்து வந்த பாட்டி, இன்று பட வாய்ப்புகள் இல்லாமல் வறுமையில் வாடுகிறார்.

செல்பி 9 பிள்ளைகள் பெற்றிருந்தும், வயிற்று பிழைப்புக்காக சென்னை மெரினா கடற்கரையில் கர்சீப் விற்று காலத்தை ஓட்டுகிறார். கடற்கரைக்கு வருவோர் இவரை அடையாளம் கண்டு கொண்டு அவருடன் ‘செல்பி' எடுத்து செல்கின்றனர்.

நடிகைகளுக்கு டூப் அவர்களுக்கு போஸ் கொடுக்கும் ரங்கம்மாள், தன்னிடம் ஏதாவது பொருள் வாங்கி செல்லுமாறும் வேண்டுகோள் வைக்கிறார். தனது நிலை குறித்து ரங்கம்மாள் உருக்கமாக கூறுகையில், "நான் எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்தே சினிமாவில் நடித்து வருகிறேன். பல நடிகைகளுக்கு ‘டூப்' ஆகவும் நடித்திருக்கிறேன்.

சினிமா வாய்ப்புகள் தமிழ் தவிர மலையாளம், இந்தி படங்களிலும் சிறிய வேடங்களில் நடித்திருக்கிறேன். 500 படங்களுக்கு மேல் நடித்து நான் சம்பாதித்த பணத்தை எனது பிள்ளைகளுக்கே செலவழித்து விட்டேன். தள்ளாத வயதில் நான் நடிக்க தயாராக இருந்தாலும் சினிமா வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

விற்பனை பெற்ற பிள்ளைகளும் கைவிட்ட நிலையில், சாப்பாட்டுக்கே வழியின்றி க‌ஷ்டப்படுகிறேன். அதனாலேயே மெரினா கடற்கரைக்கு வந்து கர்சீப் மற்றும் கைவினை பொருட்களை விற்பனை செய்து வருகிறேன். இதன்மூலம் எனக்கு சிறிய அளவிலான வருமானமே கிடைக்கிறது. அது எனக்கு போதுமானதாக இல்லை. எனவே எனக்கு தமிழக அரசோ அல்லது நடிகர் சங்கமோ உதவிக்கரம் நீட்டினால் நன்றாக இருக்கும்" என்றார்.

Comments