
தமிழக அமைச்சரவைக் கூட்டம் முடிந்த பிறகு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்களுடன் அதிகார பூர்வமற்ற முறையில் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது பேசிய துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தினகரன் குறித்து அமைச்சர்கள் யாரும் விமர்சிப்பதில்லை என்று கூறியதாக தெரிகிறது.
அப்போது குறுக்கிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தினகரன் குறித்து அமைச்சர்கள் விமர்சிக்க வேண்டும் என்றும் அதிமுகவுடன் தினகரன் அணி இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
தினகரனை தவிர்த்து யார் வேண்டுமானாலும் அ.தி.மு.க.வில் இணையலாம் என்றும் முதலமைச்சர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
தினகரன் அணியில் உள்ளவர்கள் அ.தி.மு.க.வில் இணைய வேண்டும் என்று முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் இணைந்து அறிக்கை வெளியிட வேண்டும் என்று அமைச்சர் சி.வி. சண்முகம், கேட்டு கொண்டதாக தெரிகிறது.
இது தொடர்பான அறிக்கை அ.தி.மு.க.வில் இருந்து விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Comments