இந்தியாவின் மிகநீள ஈரடுக்கு பாலம்; பிரதமர் மோடி அர்ப்பணித்தார்

AtalBihari Vajpayee, Bogibeel Bridge, Assam Railroad Bridge, ஈரடுக்கு பாலம், பிரதமர் மோடி ,போகிபீல் , முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாள், bogibeel bridge assam, bogibeel bridge 2018, Bogibeel Railroad Bridge , PM Modi, Former Prime Minister Vajpayees birthday, திருப்கார்: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாளில், அசாமில் இந்தியாவின் மிக நீளமான ரயில் மற்றும் சாலை வசதிகள் கொண்ட போகிபீல் ஈரடுக்கு மேம்பாலத்தை பிரதமர் மோடி, நாட்டிற்கு அர்ப்பணித்தார்.

21 ஆண்டுகளாக
அசாமின் தேமாஜி, அருணாச்சல் பிரதேசத்தின் திப்ருகர்க் பகுதிகளை இணைக்கும் வகையில், பிரம்மபுத்திரா நதியின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளை இணைத்து 4.94 கி.மீ. நீளத்தில் கட்டப்பட்டது இப்பாலம். இது ஆசியாவின் இரண்டாவது மிகப் பெரிய பாலம் ஆகும். 21 ஆண்டுகளாக கட்டும் பணி நடந்தது. 

1997-ல் முன்னாள் பிரதமர் தேவகவுடாவால் அடிக்கல் நாட்டப்பட்டு 2002-ல் அப்போதைய பிரதமர் வாஜ்பாயால் பணிகள் துவங்கி வைக்கப்பட்டது. கீழ் தளத்தில், ஒரே நேரத்தில் இரண்டு ரயில்களும், மேல் தளத்தில் 3 வழிச்சாலையும் இந்தப் பாலத்தில் பயணிக்கும் படி கட்டப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 3-ம் தேதி பணிகள் நிறைவடைந்தன. இன்று (டிச 25-ம் தேதி) இப்பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். தொடர்ந்து அந்த பாலத்தில் பயணம் செய்தார். 

கால விரயம் குறையும்

இந்த பாலத்தில் ரயில்கள் இயக்கப்பட்டவுடன் வட கிழக்கு மாநிலங்களில் போக்குவரத்தை மேம்படுத்துவதன் மூலம் இந்தியாவின் கிழக்குப் பகுதிகளில் உள்ள நாடுகளுக்கு ஏற்றுமதி அதிகரிக்க முடியும். வடகிழக்கு மாநிலங்களின் பொருளாதாரம் மேம்படும். சீனாவுக்கு அருகில் எல்லையை விரைவில் அடைய இந்த பாலம் பாதுகாப்பு படையினருக்கு பெரும் உதவியாக இருக்கும். காலநேர விரயம் குறைகிறது.

Comments