
ஜகர்தா:இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா தீவில் உள்ள அனாக் கிரகடாவ் என்ற எரிமலை நேற்று முன்தினம் 22-ம் தேதி இரவு வெடித்து சிதறியது. எரிமலையில் வெடித்து சிதறியதில், ராட்சத சுனாமி அலைகள் தெற்கு சுமத்ரா மற்றும் மேற்கு ஜாவா தீவுகளை கடுமையாக தாக்கின. இதில் தற்போது வரை பலியானனவர்களின் எண்ணிக்கை 373 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 1500 பேரை காணவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏராளமான உடல்கள் மீட்கப்பட்டு வருவதுடன் இடிபாடுகளில் சிக்கி காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
Comments