
தேர்தல் வெற்றிக்கு பின் அவர் முதல்முறை தற்போதுதான் மோடியை சந்திக்கிறார். சந்திரசேகர ராவ் நாடாளுமன்ற தேர்தலுக்கு காங்கிரஸ், பாஜக ஆகிய இரண்டு கட்சிகளும் இல்லாத கூட்டணியை உருவாக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக சந்திரசேகர ராவ் மாநில தலைவர்களை, முக்கிய அரசியல்வாதிகளை சந்தித்து வருகிறார். இரண்டு நாட்களுக்கு முன் சந்திரசேகர ராவ் ஒடிசா முதல்வர் பிஜு ஜனதா தளம் கட்சியை சேர்ந்த நவீன் பட்நாயக்கை சென்று சந்தித்தார். அதன்பின் சந்திரசேகர ராவ் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியை சந்தித்தார்.
இந்த நிலையில் தற்போது பிரதமர் மோடியை சென்று சந்தித்துள்ளார். இதனால் இந்த சந்திப்பு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் இவர் என்ன விஷயங்கள் பேசினார்கள் என்பது குறித்த விவரம் வெளியாகவில்லை. ஏற்கனவே ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு முன்னெடுப்பில் நாடளுமன்ற தேர்தலுக்கு பெரிய எதிர்க்கட்சிகளின் கூட்டணி உருவாகும் நிலையில் உள்ளது. இதற்கு மத்தியில் தெலுங்கானா முதல்வரின் இந்த அதிரடி தேசிய அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Comments