மறு தணிக்கை செய்யப்பட்டது சர்கார் திரைப்படம்.. எந்தெந்த காட்சி நீக்கம்? இதோ லிஸ்ட்

Sarkar re censor work have begins சென்னை: சர்கார் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கும் பணி முடிவடைந்து, இப்போது மறு சென்சார் செய்யப்பட்ட காட்சிகளுடன் படம் காட்டப்படுகிறது.

அதிமுகவினரின் ஆவேச போராட்டங்களால், சர்ச்சை காட்சிகளை நீக்குவதாகவும், கோமளவள்ளி என்ற பெயர் வரும் இடத்தில் ம்யூட் செய்வதாகவும், பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.

Sarkar re censor work have begins இதையடுத்து இன்று காலை 11.30 மணிக்கு மறு தணிக்கை பணிகள் துவங்கியது. சுமார் ஒரு மணி நேரத்தில் அந்த பணி முடிந்தன. இன்று மேட்னி ஷோ முதல், மறு தணிக்கை செய்யப்பட்ட காட்சிகள் திரையிடப்பட்டு வருகிறது. சில தியேட்டர்களில் மாலை முதல் மறு தணிக்கை செய்யப்பட்ட படம் காட்டப்படும்.

எந்தெந்த காட்சிகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து, இப்போது விவரம் வெளியாகியுள்ளது.

இலவச பொருட்களை தீயிட்டு எரிக்கும் 5 நொடி காட்சிகள் நீக்கம். கோமளவல்லியில், 'கோமள' என்ற சொல் ம்யூட் செய்யப்படும். கொசு உற்பத்திக்குக் காரணமான பொதுப்பணித்துறை என்ற வரியில், பொதுப்பணித்துறை ம்யூட் செய்யப்படும்.

Comments